அனைத்து மலேசியர்களும் தந்தையர் தினத்தை ராகாவுடன் கொண்டாடலாம்

10-ஆண்டு புகைப்படச் சவாலில் பங்கேற்பதோடு ஜூன் 15 முதல் 21 வரை சிறப்பு காணொளிகளைக் கண்டு மகிழலாம்

தந்தையர் தினத்தைக் கொண்டாடுகிறது ராகா

  • அனைத்து மலேசியர்களும் ஜூன் 15 முதல் 21 வரை சுவாரஸ்சியமான 10 ஆண்டு புகைப்படச் சவாலில் (10-year photo challenge) பங்கேற்பதன் மூலம் ராகாவின் தந்தையர் தினக் கொண்டாட்டத்தில் கலந்துச் சிறப்பிக்களாம்.
  • ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் தந்தையுடன் எடுத்த புகைப்படத்தை மீண்டும் எடுப்பதோடு, அசல் புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட வேண்டும். மேலும், ராகாவையும் (@raaga.my) டேக் செய்ய வேண்டும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் ராகாவின் சமூக ஊடகங்களில் இடம்பெறும். ராகா அறிவிப்பாளர்கள் மற்றும் பிரபலமான உள்ளூர் கலைஞர்கள் பதிவிட்டப் படங்களையும் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.
  • அதுமட்டும்மின்றி, தந்தைகளூக்கு சமர்ப்பிக்கும் வகையில் ராகா அறிவிப்பாளர்களின் சுவாரஸ்சியமான மனதை கவரும் காணொளிகளையும் ராகாவின் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கண்டு ரசிக்களாம். ஜூன் 20, ஒரு தந்தைக்கும் குழந்தைக்கும் இடையிலான தலைமுறை இடைவெளியைப் பற்றின காணொளியையும் ஜூன் 21, தந்தைகள் குழந்தைகளுக்காக செய்த தியாகங்களைப் பற்றிய காணொளியையும் கண்டு மகிழலாம்.
  • மேலும் விபரங்களுக்கு, ராகாவின் இன்ஸ்டாகிராம் (@raaga.my) பக்கத்தை வலம் வரவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here