துன் மகாதீரின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதி மன்றம்

கோலாலம்பூர்: பார்ட்டி பிரிபூமி பெர்சத்து  மலேசியாவின் (பெர்சத்து) உறுப்பினராக இருக்க துன் டாக்டர் மகாதீர் முகமது  மற்றும் அதன் தலைவர் பொறுப்பு ஆகியவற்றிக்காக செய்திருந்த மனுவை  உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.    ஜூலை 9 ஆம் தேதி விசாரணைக்கு வரும் வரை  அத்தடை உத்தரவு நிலுவையில் இருக்கும்.

முன்னாள் பிரதமரும் மற்ற ஐந்து பெர்சத்து தலைவர்களும்  கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருது  நீக்கப்பட்டனர், இந்த முடிவை ரத்து செய்ய ஜூன் 9 அன்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மற்ற ஐந்து உறுப்பினர்களான டாக்டர் மகாதீரின் மகன் முக்ரிஸ் மகாதீர் முன்னாள் அமைச்சர்கள் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் மற்றும் மஸ்லீ மாலிக், முன்னாள் துணை மந்திரி அமிருடீன் ஹம்சா, மற்றும் மர்சுகி யஹ்யா, பொதுபணி செயலாளர் முஹம்மது சுஹைமி யஹ்யாவுக்கு அவர்களை அகற்ற அதிகாரம் இல்லை என்றும் அது தவறானது என்று கூறி மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here