சீனாவில் புதிதாக 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது. இதில், தலைநகர் பெய்ஜிங்கில் 24 பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
இதன்மூலம் கடந்த சில தினங்களில் சீனாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொற்றால் யாரும் சீனாவில் உயிரிழக்கவில்லை. இருப்பினும் சீனாவில் 265 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையே பெய்ஜிங் நகரத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் தீவிரம் அடைந்து வருகின்றன. அங்கு நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பேர் சராசரியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
நூலகங்கள், அருங்காட்சியகங்கள், பூங்காக்கள் பார்வையாளர்கள் வருகையை 30 சதவீதம் வரை கட்டுப்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.