ஜோகூரில் 7 தொகுதிகளை பெர்சத்து பறிகொடுக்கும் – மஸ்லீ மாலிக் எச்சரிக்கை

அடுத்த பொதுத் தேர்தலில் ஜோகூர் மாநிலத்தில் பெர்சத்து 7 தொகுதிகளில் தோல்வி காணும் என சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்லீ மாலிக் எச்சரித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் பெர்சத்து கட்சி பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டது. மலாய்க்காரர்கள் அதிகம் உள்ள 17 தொகுதிகளில் பெர்சத்து போட்டியிட்டது.

இதில் மஇகாவின் வசம் இருந்த கம்பீர் சட்டமன்ற தொகுதியும் ஒன்றாகும். பெர்சத்து கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. அம்னோவைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் அணி தாவியதால் பெர்சத்துவின் எண்னிக்கை 11ஆகக் கூடியது.

ஜோகூர் மாநிலத்தில் அம்னோவுக்கு 17 இடங்களும் மஇகாவுக்கு ஓர் இடமும் கிடைத்தன. 3ஆவது அணியில் போட்டியிட்ட பாஸ் கட்சி ஓரிடத்தில் வெற்றி பெற்றது. ஜோகூர் மாநிலத்தில் 56 சட்டமன்றத் தொகுதிகளில் 36 தொகுதிகளைக் கைப்பற்றியதால் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை அமைத்தது. ஆனால் வரும் பொதுத் தேர்தலில் பெர்சத்து கட்சி குறைந்தது 7 தொகுதிகளைப் பறிக் கொடுக்கும் என அவர் எச்சரித்தார். மலாய்க்காரர்கள் அல்லாத தொகுதிகளில் பெர்சத்து வெற்றி பெறுவது கடினம்.

கடந்த பொதுத் தேர்தலில் பெர்சத்து கட்சிக்கு அதிகளவில் மலாய்க்காரர் அல்லாதவர்களின் வாக்குகள் கிடைத்தன. அந்த வகையில் 8 இடங்களில் வெற்றி பெற முடிந்ததாக மஸ்லீ கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here