நடிகர் மரணத்தால் தவிக்கும் செல்ல நாய்! மனதை உருக்கும் போட்டோ!!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆசையாக வளர்த்த அவரது நாய் உண்ணாமல் உறங்காமல் இருக்கும் ஃபோட்டோ மனதை உருக்குவதாக உள்ளது.

பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலிவுட்டின் வாரிசு நடிகர்களால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. சுஷாந்தின் அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டது. இந்நிலையில் சுஷாந்த் ஆசையாக வளர்த்த அவரது நாய் ஃபட்ஜியின் போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சுஷாந்தின் செல்ல நாய் ஃபட்ஜும் அவரது மறைவால் நொறுங்கி போயுள்ளது.

உடைந்து போயிருக்கும் ஃபட்ஜின் போட்டோவை ஒரு ட்விட்டர் பயனர் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோக்களில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் செல்ல நாய் ஃபட்ஜ் ஒரு படத்தில் அவரது போட்டோவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here