சாலைகள் பந்தயகளம் அல்ல

சாலைகள் பூமியின் மகிழ்ச்சிக் கோடுகள் என்று கூறுகின்றவர்கள் உண்டு. சொகுசுக் கார்களையும் வாகணங்களையும் பத்திரமாக இணைக்கும் சாலைகள் அழகிய சித்திரம், புதுக்கவிதை. கோடுகள் ஓவியம் என்றெல்லாம் காரணப்பெயர்களும் உண்டு.

எந்த ஊரையும் இலகுவாக இணைக்கும் நீண்ட கயிறு என்றும் கூறுகின்றனர். கார்களுக்குச் சேதமில்லாமல் பாதுகாக்க இன்றைய சொகுசு சாலைகள் முக்கிய பங்காற்றுகின்றன.

அந்தச் சாலைகளை மரணச்சாலைகளாக மாற்றுவதா என்கிறார் டான்ஶ்ரீ லீ லாம் தாய். இவர் சாலை பாதுகாப்பு ஆலோசனை மன்றத் தலைவராகவும் இருக்கிறார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டிகளின் மரணம் குறித்து அவர் கவலை தெரிவித்திருக்கிறார். இவர்களைப் பாதுகாக்க மோட்டார் சைக்கிள் வேகத்தைக் குறைக்கும் முறைகள் பற்றி யோசிக்குமாறும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here