சினி சட்டமன்ற இடைத்தேர்தலின் வேட்பு மனு தாக்கல் இன்று காலை நடைபெற்றது.
இத்தேர்தலில் இரு சுயேட்சை வேட்பாளர்கள் களமிறங்கியிருக்கும் வேளையில் மும்முனை போட்டி நிலவுகிறது.
தேசிய முன்னணியைச் சேர்ந்த முகமட் ஷாரிம் முகமட் சின் (தராசு சின்னம்) சுயேட்சை வேட்பாளராக தெங்கு டத்தோ ஸைனுல் ஹிஷாம் தெங்கு ஹூசின் (வீடு சின்னம்) மற்றொரு சுயேட்சை வேட்பாளராக முகமட் சுக்ரி முகமட் ரம்லி (சாவி சின்னம்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலின் முன்கூட்டியே வாக்களிக்கும் நடவடிக்கைகள் வரும் ஜூன் 30ஆம் தேதி நடைபெறும் வேளையில் ஜூலை 4ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
மேலும் கோவிட் 19 காலக்கட்டத்தில் இந்த இடைத்தேர்தல் நடைபெறுவது புதிய சூழலில் வரலாறாக தான் அமையவிருக்கிறது.