ஜப்பானில் அடையாளம் தெரியாத நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு

ஜப்பான் நாட்டில் அமாமி தீவு பகுதியில் கடந்த 18-ந் தேதி மாலை அடையாளம் தெரியாத நீர்மூழ்கி கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் அந்த தீவின் வட கிழக்கு பகுதியில் தொடர் மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அந்த கப்பல் நேற்று காலையில் யோகோயேட்-ஜிமா தீவின் மேற்கு பகுதியை நோக்கி நகர்வது தெரியவந்தது.

இதையடுத்து அந்த கப்பலை கண்காணித்து, அது குறித்த தகவல்களை சேகரிக்குமாறு ராணுவத்துக்கு ஜப்பான் ராணுவ மந்திரி டாரோ கோனோ உத்தரவிட்டுள்ளார்.

உடனே ஒரு கவாசாகி ரோந்து விமானம், லாக்ஹீட்-3 நீர்மூழ்கி கப்பல் தடுப்பு மற்றும் கடலோர கண்காணிப்பு விமானம், 3 ரோந்து கப்பல்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here