தொற்றை ஒழிக்க மக்களால் மட்டுமே முடியும்!

கோவிட் -19 தொற்றுக்கான விழிப்புணர்வில் சமூத்தத்தின் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் முன்னிலைப் பணியாளர்களுக்கு அவசியம் தேவை.

சமூகம், சமூகத் தலைவர்கள், கிராமத் தலைவர்களை உள்ளடக்கிய, தங்கள் சமூகங்களில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட புதிய இயல்பான,  நிலையான இயக்க நடைமுறைக்கு (எஸ்ஓபி) கட்டுப்படுவதை உறுதி செய்வதன் மூலம் இந்த பொறுப்பை மேம்படுத்த வேண்டும்.

இந்த உணர்தலில்தான், சுகாதார அமைச்சகம் இயங்குகிறது, கல்வி கற்பித்தல், பயிற்சி செய்தல், இணங்குதல் ,கண்காணித்தல் (சிஏபிபி) என்ற கருத்தை அறிமுகப்படுத்தியது. கோவிட் -19  லிருந்து சமூகம் விடுபட வேண்டும். அதற்கு சமூகமும் ஒத்துழைக்க முன்வர வேண்டும்.

சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஆடம் பாபா, இந்த செய்தியை தெளிவுபடுத்தும்போது, ​​கோவிட் -19 மாவட்ட இடர் குறைப்பு திட்டத்தை (டிஆர்பிபி) மேம்படுத்துவதற்கான ஓர் உத்தியாக இது அமையும் என்றார்.

கோவிட் -19 லிருந்து பசுமை மண்டலங்களைப்  பாதுகாக்கவும் . மஞ்சள் மண்டலங்களைப்  பச்சை மண்டலங்களாக  மாற்றுவதே முக்கிய நோக்கமாகும்.

கோவிட் -19 நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க, பணிநெறியைக் கடைப்பிடித்து, அவர்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க, புதிய சூழல் உருவாகியிருக்கிறது என்று அவர் ஒரு நேர்காணலின் போது  கூறினார்.

சுகாதார அமைச்சின் கொமுனிட்டி சிஹாட் பெம்பினா நெகாரா அல்லது கோஸ்பன் எனும் ஆரோக்கியமான சமூக நாட்டை உருவாக்ககூடியவர்களாக, சமூக மட்டத்தில் கிராமத் தலைவர்கள், மலேசியாவின் தன்னார்வத் துறையினர் (ரெலா), கிராம அபிவிருத்தி பாதுகாப்புக் குழுக்கள் (ஜே.கே.கே.கே)   ரோந்துப் பணியினர் விளங்குகின்றனர்.

அவர்கள் தான் முன்னணியில் இருப்பவர்கள், அவர்கள் இணைந்தால், அது பெரிய சமூகமாக மாறும். பசுமை மண்டல நிலையைத் தக்க வைத்துக் கொள்ள உதவும். அதே நேரத்தில் மஞ்சள் அல்லது சிவப்பு மண்டலங்களில் உள்ளவர்கள் அவற்றை பச்சை மண்டலங்களாக மாற்ற  முழுமையான ஒத்துழைப்பாளர்களாக மாறவேண்டும்.

தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பாளர்களாக சமூகத்தை மாற்றவேண்டும். கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்த சுகாதார அறிவிப்புகள், பசுமை மண்டலங்களில் சமூகத்தைப் பசுமைக்கு மாற்றும் ஊக்குவித்தலுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் முன் வருவார்கள்.

வெளிநாட்டினரிடையே சிஏபிபி அமல்படுத்தப்படுவது குறித்து, வெளிநாட்டு முதலாளிகள், தூதரகங்கள் முக்கிய பங்கைக் கொண்டிருக்கின்றன, ஏனெனில் அவர்கள் தங்கள் குடிமக்களுக்கு, குறிப்பாக கோலாலம்பூர், சிலாங்கூர் போன்ற சிவப்பு , மஞ்சள் மண்டலங்களில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்.

பரிந்துரைக்கப்பட்ட எஸ்ஓபிக்கு இணங்குவதன் மூலமும், புதிய இயல்பான, குறிப்பாக சமூக தூரத்தை கவனிப்பதன் மூலமும் கோவிட் -19 உடன் போராட அனைத்து மலேசியர்களின் ஒத்துழைப்பை டாக்டர் ஆடாம் பாபா பெரிதும் வரவேற்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here