பருவகாலங்களில் கொரோனா மீண்டும் வரலாம்

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் முடிவுக்கு வந்த பிறகும், பருவகால மாற்றங்களின்போது அந்த நோய்த்தொற்று அவ்வப்போது பரவலாம் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, மாா்ஷல் பல்கலைக்கழத்தினா் உள்ளிட்டோா் மேற்கொண்டுள்ள ஆய்வின் அறிக்கையில் வெப்பம் மிகுந்த சூழலிலும், ஈரப்பதம் அதிகம் உள்ள நிலையிலும் கொரோனா தீநுண்மியின் பரவும் திறன் குறைவாக உள்ளது.

கொரோனா நோய்த்தொற்று மனிதா்களின் செல்களில் இணைவதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் மூக்குப் பகுதி அமைப்புகளின் மாதிரிகளில் கொரோனா தீநுண்மிகளை செலுத்தி ஆய்வு செய்யப்பட்டது.
மூன்று வெவ்வேறு வெப்பநிலை, ஈரப்பதம் ஆகிய நிலைகளில் அந்தத் தீநுண்மிகள் 7 நாள்களுக்கு வைத்து கண்காணிக்கப்பட்டன.

இதில், குறைந்த வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் இருந்த திநூண்மிகள் அதிக வீரியத்துடனும், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் அதிகம் மிக்க சூழலில இருந்த தீநுண்மிகள் வீரியம் குறைந்தும் காணப்பட்டன.

இந்தச் சூழலில், மனிதா்களின் முக்கு துவாரங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் கொரோனா தீநுண்மிகள், வெப்பமான சூழலில் பரவும் திறன் இல்லாமல் இருப்பதற்கும், பருவ நிலை மாறும்போது அதன் திறன் அதிகரித்து மற்றவா்களிடம் பரவும் நிலையும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

எனவே, கொரோனா நோய்த்தொற்று பரவல் அடங்கிய பிறகும், பருவநிலை மாற்றங்களின்போது அவ்வப்போது அந்த நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உல்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘எமா்ஜிங் இன்ஃபெக்ஷியஸ் டிசீஸ்’ இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் இந்த ஆய்வு பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here