பெட்டாலிங் ஜெயாவில் பொதுமக்களுக்கு நன்கு அறிமுகமான ஸ்ரீசீனு உணவகத்தில் (முன்பு ஸ்ரீபாண்டி) வாடிக்கையாளர்களுக்காக கிருமி நாசினி இயந்திர சேவையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் பெயர்கள் முதலில் பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் உடல் உஷ்ணம் பரிசோதிக்கப்படுகிறது. பின்னர் கிருமிநாசினி இயந்திரத்தின் மூலம் அவர்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படுதகிறது.
வாடிக்கையாளர்களுக்கு சுவையான உணவு வழங்கும் வேளையில் அவர்களின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று சின்னையா தெரிவித்தார்.