மோரீப்பில் உதவி திட்டத்திற்கு 150 பேர் பதிவு

வசதி குறைந்த இந்திய குடும்பங்களுக்கு உதவும் நடவடிக்கையாக ம.இ.கா தொடங்கிய உதவி திட்டத்தின் கீழ் மோரீப் வட்டார பகுதியில் 150௦ பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டனர்.

கிளனங் பாரு ஸ்ரீ மாகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் அரசாங்கம் அமல் படுத்திய நடமாட்ட கட்டுப்பாட்டு ஆனண சட்டவிதிக்கு உட்பட்ட முறையில் அதன் பதிவுகள் நடைபெற்றதாக ஏற்பட்டு குழு தலைவரும் சிலாங்கூர் மாநில ம.இ.கா இளைஞர் பகுதி தலைவர் வழக்கறிஞர் ரெ.ஸ்ரீதரன் கூறினார்.

உதவி திட்டத்தில் வசதி இல்லாத இந்திய குடும்பத்தினர் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த நிகழ்வு நடைபெற்றதாக குறிப்பிட்ட அவர் எதிர் பார்த்ததை காட்டிலும் அதிகமானோர் பதிவு செய்து கொண்டனர் என்று கூறினார். இந்த திட்டம் வெற்றி பெற கோலலங்காட் தொகுதி இளைஞர் பகுதியினர் மகளிர் பகுதியினர் முழு ஒத்துழைப்பு நல்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here