நாளை முதல் SPM, SVM, STAM, STPM மாண்வர்களுக்காக பள்ளிகள் மீண்டும் திற்க்கப்படவுள்ளது என்று கல்வி அமைச்சர் முகமட் ரட்ஷீ ஜுடின் தெரிவித்தார்.
இந்நிலையில் கிளாந்தான், திரெங்கானு, கெடா மற்றும் ஜோகூர் மாநிலங்களில் உள்ள பள்ளிகள் புதன்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை பள்ளிகள் திறந்திருக்கும். மற்ற மாநிலங்களில் புதன்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பள்ளிகள் திறந்திருக்கும் என்று அவர் கூறினார்.
இதனிடையே முறையான எஸ்.ஒ.பிகளை பள்ளிகள் பின்ப்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.
மேலும் பாலர் பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூலை 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று கல்வித்துறை துணையமைச்சர் அமைச்சர் டாக்டர் மா ஹங் சூன் தெரிவித்தார்.