எம்சிஓ: விசா காலாவதியா? அதனை புதுப்பித்துக் கொள்ளுங்கள் – இஸ்மாயில் சப்ரி

புத்ராஜெயா:  எம்.சி.ஓ  காலத்தில்   சுற்றுலா விசா காலாவதியான  வெளிநாட்டவர்கள் குடிவரவு அலுவலகங்களுக்கு சென்று தங்கள் விசா நீட்டிப்பு செய்து கொள்ளலாம் என்று டத்தோஶ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

RMCO இன் போது   விசா  காலாவதியான வெளிநாட்டவர்கள்  நேராக விமான நிலையத்திற்குச் சென்று அந்தந்த நாடுகளுக்குச் செல்லலாம் என்றும் மூத்த அமைச்சர் கூறினார். இது  RMCO முடிவடைந்த 14 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும்  என்று அவர் செவ்வாயன்று (ஜூன் 23) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.மீட்பு MCO ஜூன் 10 முதல் ஆகஸ்ட் 31 வரை அமலில் இருக்கிறது.

கடந்த வாரம், இஸ்மாயில் சப்ரி, காலாவதியான விசாக்கள் கொண்ட வெளிநாட்டவர்கள்  RMCO இன் போது அவற்றை புதுப்பிக்க  இயலவில்லை கூற எந்தவிதமான காரணமும் இல்லை. ஏனெனில் குடிவரவு அலுவலகங்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டவர்கள் நீண்ட காலம் தங்க விரும்பினால், அவர்கள் விசாவை புதுப்பிக்க வேண்டும் என்றார்.

சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு எதிரான சமீபத்திய நடவடிக்கைகளின் போது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் விசாக்கள் காலாவதியான சில இந்திய சுற்றுலா பயணிகள் அடங்குவதாக வெளியான செய்தியை தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட பின்னர் அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

முந்தைய MCO இன் போது குடிவரவு அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தபோது, ​​விசாக்கள் காலாவதியானவர்கள் நாட்டை விட்டு வீடு திரும்பும்போது தங்கள் விமான டிக்கெட்டுகளை மட்டுமே காட்ட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here