சீனாவை சேர்ந்த 40 வயதான ஹூ என்பவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இவர் அடிக்கடி மதுஅருந்திவிட்டு தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஒரேநேரத்தில் தொடர்ச்சியாக 10 பீர்களை குடித்துவிட்டு தொடர்ந்து 18 மணி நேரமாக சிறுநீர் கூட கழிக்காமல் தூங்கி உள்ளார்.
இதையடுத்து மறுநாள் காலையில் எழுந்த அவர்க்கு வயிற்று பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது சிறுநீர்ப்பை சேதமடைந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.
அதன்பின் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் சிறுநிர்ப்பை சிதைவை மருத்துவர்கள் சரிசெய்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பின் ஹூ இயல்புநிலைக்கு திரும்பி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட நேரமாக சிறுநீரை கழிக்காமல் அடைத்து வைத்திருந்ததே இதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறினர்.