தெங்கு ஸைனுலுக்கு வாக்களியுங்கள் – துன் மகாதீர்

பகாங் பெக்கான் சினி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பெர்சத்துக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் தெங்கு ஸைனுல் இஸாம் தெங்கு ஹுசேன் போட்டியிடுகிறார்.

இந்த இடைத்தேர்தலில் பெர்சத்து கட்சி போட்டியிடவில்லை. இருப்பினும் பெக்கான் பெர்சத்து தொகுதி துணைத்தலைவரான தெங்கு ஸைனுல் இஸாம் தெங்கு ஹுசேன் சுயேட்ச்சையாக போட்டியிடுகிறார்.

தேசிய முன்னணி சார்பில் முகமட் ஷாரிமான் முகமட் ஸின், மற்றோர் சுயேட்ச்சையாக முகமட் சுக்ரி ஆகியோரும் போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

வரும் ஜூலை 4ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறும் வேளையில் 20,999 பேர் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றிருக்கிறார்கள்.

கடந்த பொதுத்தேர்தலில் மும்முனைப் போட்டியில் 4,622 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தேசிய முன்னணி வேட்பாளர் அபு பாக்கார் காலமானதைத் தொடர்ந்து இங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

சுயேட்ச்சையாக களம் இறங்கியுள்ள தெங்கு ஸைனுல் இஸாம் தெங்கு ஹுசேனுக்கு வாக்களிக்கும்படி துன் டாக்டர் மகாதீர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here