முடங்கிக்கிடக்கும் தொழில்களில் நீச்சல் குளம்

தொற்று நோய்க்குப்பின் முடங்கிவிட்ட பலதொழில்களில் சிறுதொழில்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றாக இருக்கிறது நீச்சல் குளம்.

நீச்சல் குளம், வீடுகளில் இருப்பதில் அதிகப்பிரச்சினைகள் எழவில்லை. ஆனால், பொது நீச்சல்குளங்கள் உண்மையிலேயே ஆபத்தானவையாகவே இருக்கின்றன.

நோய்த்தொற்று பொதுநீச்சல் குளத்தில் அதிகமாகிவிடக்கூடும் என்ற அச்சத்தில் செயல்படுவதினின்று தடுக்கப்பட்டிருந்தது. இதில் பலருக்கு அதிருப்தி அதிகமாக இருந்தாலும் சுகாதார நன்மைக்காக அப்படிச்செய்ய வேண்டிய அவசியத்தை மக்களும் புரிந்துகொண்டார்கள்.

நீச்சள் குளம் மீண்டும் திறக்கபட முழுமையான ஒப்புதல் இல்லாவிட்டாலும், திறக்க வேண்டும் என்கின்றவர்கள் அனைத்துலக வாணிபத்துறையிடம் பதிந்துகொள்ள வேண்டும் என்று மூத்த அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

இணைத்தளம் வழி பதிந்துகொள்ளலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார். இப்பிரச்சினைக்கு ஊராட்சி வீடமைப்புத்துறையும் இணைந்து பணியாற்றும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here