இந்து திருமண -நிச்சயதார்த்த வைபவங்களுக்கு 250 பேர் பங்கேற்க்க அனுமதி வழங்கிய அரசாங்கத்திற்கு இந்து அர்ச்சகர் சங்கம் நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநில பேரவை நன்றி தெரிவுத்துக் கொள்வதாக அதன் தலைவர் சிவஸ்ரீ டாக்டர் ஏ.எல்.ஆனந்த கோபி சிவாச்சாரி கூறினார்.
அதே வேளை இதேப் போன்ற அனுமதியை இந்து இறப்பு, இறுதிச் சடங்கு மற்றும் ஆத்ம சாந்தி பிரத்தனை போன்ற குடும்ப காரியங்களிலும் பங்கேற்கும் குடும்ப உறுப்பினர்கள், உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோரின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் பரிசிலனை செய்ய வேண்டும் என மாநில இந்து சங்க சமய துறை தலைவருமான அவர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.
அரசாங்க நிபந்தனையுடனான மீட்சியுரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைப்படி தற்போது இறப்பு காரியங்களில் 20 பேர் மற்றும் ஈமக்காரியங்களில் 5 பேர் என்ற எண்ணிக்கையில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய சூழலில் ஒரு குடும்பத்தில் குறைந்த எண்ணிக்கை என்றால் 5 பேராகிவுடுகிறது, அதே வேளை இறந்தவருக்கு 10 பிள்ளைகள் என்றாலே அந்த எண்ணிக்கை 50 ஆகிவிடுகிறது. இதனால் வேண்டியவர் வேண்டாதவர் என்ற நிலை அங்கு உருவாகும் போது, குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மனஸ்தாபனம் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க இந்த கோவிட்-19 உத்தரவில் அரசாங்கம் விடுத்துள்ள தளர்வுகளின்படி, எஸ்ஓபி எனப்படும் நிரந்தர செயல் நடவடிக்கையை இக்காரிய நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் என்றும் ஆனந்த கோபி குறிப்பிட்டார்.
அதே வேளை ஆலயங்களில் நடைப்பெறும் பூஜைகள் மற்றும் வழிப்பாடுகளில் பங்கேற்க்கும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனும் பரிந்துரையை தாம் அரசாங்கத்தின் கவனத்திற்கு முன் வைப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும் ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் எனும் ஆத்திச்சுடி வரிகளுக்கு ஏற்ப ஆலய வழிப்பாடுகளில் சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் பங்கேற்க்க அனுமதிக்க வேண்டும். இதனை அரசாங்கம் மறுபரிசிலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
– நாகேந்திரன் வேலாயுதம்