ஈப்போ மாநகர் மன்ற உறுப்பினர்களாக ஜெய்கணேஷ், கணேசன் நியமனம்

ஈப்போ மாநகர் மன்றத்தின் உறுப்பினர்களாக எட்டு பேர் நியமனம் செய்யப்பட்டனர்.

அவர்களில் நான்கு பேர் தேசிய முன்னணி கூட்டணியைச் சேர்ந்தவர்கள். மூவர் பார்ட்டி பிரிபூமியைச் (பெர்சத்து) சேர்ந்தவர்கள். மற்றொருவர் பாஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.

சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்ட எட்டு பேரில் பேராக் மாநில மஇகா இளைஞர் பகுதித் தலைவர் ஜெயகனேசன் செல்வராஜு, புந்தோங் சட்டமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி கணேசன் ஆதி. நாராயணன் ஆகியோர் அடங்குவர்.

இவர்களின் பதவி காலம் 1 மே 2020௦ தொடங்கி 30௦ ஏப்ரல் 2021 வரை நீடிக்கும். கடந்த மே 4 ஆம் தேதி 17 பேரும் நேற்று முன்தினம் எட்டு பேரும் என மொத்தம் இந்த தவணைக்கு 25 பேர் ஈப்போ மாநகர் மன்றத்தின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here