சிமெண்ட் தொழிற்சாலையில் 62 பேர் பணி நீக்கம்

உள்நாட்டுத் தொழிலாளர்களை நீக்கிவிட்டு வெளிநாட்டுத் தொழிலாளிகளை நிலைநிறுத்தும் ஒய்டிஎல் சிமெண்ட் தொழிற்சாலை நிர்வாகத்தின் போக்கை மனிதவள இலாகா விசாரிக்க வேண்டும் என்று சிமெண்ட் தொழிலாளர் சங்கம் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணனைக் கேட்டுக்கொண்டது.

அரசாங்கத்தின் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருந்த காலகட்டத்தில் 2020௦, மே 8 ஆம் தேதி ஒய்டிஎல் சிமெண்ட் ஆலை அதன் 62 தொழிலாளர்களை ஆட்குறைப்புச் செய்தது என்று சிமெண்ட் தொழில்துறை தொழிலாளர் சங்கத்தின் உதவித் தலைவர் எஸ். செல்வதுரை தெரிவித்தார்.

ஒய்டிஎல் நிறுவனத்தின் இம்முடிவுக்குத் தொழிலாளர் இலாகா கூடுதல் உத்தரவாதம் அளித்திருப்பதாக அதன் மனித வள பிரிவு இயக்குநர் திரேசா, சிமெண்ட் தொழில்துறை தொழிலாளர் சங்கத்துடன் 2020௦ மே 14ஆம் தேதி நடத்திய ஒரு சந்திப்பில் தெரிவித்ததாக அவர் கூறினார்.

ஒய்டிஎல் ரவாங் சிமெண்ட் ஆலையில் 62 தொழிலாளர்களை ஆட்குறைப்புச் செய்வதற்கு தொழிலாளர் இலாகா கூடுதல் உத்தரவாதம் அளிக்கப்படுவதை 2020௦ ஜூன் 5ஆம் தேதி ஒய்டிஎல் சிமெண்ட் ஆலை நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில் மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதையும் செல்வதுரை சுட்டிக்காட்டினார்.

கோவிட்-19 பெருந்தொற்றுக் கிருமியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விதிக்கப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலகட்டத்தில் தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்குவதோ, சம்பள வெட்டை ஏற்றுக்கொள்ளும்படி பலவந்தப்படுத்தவோ, சம்பளம் இல்லாத கட்டாய ஆண்டு விடுமுறையில் செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்துவோ கூடாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்விவகாரத்தில் மனிதவள அமைச்சரின் உத்தரவுகள், வழிகாட்டிகள் மிகத் தெரிவாக இருப்பதாகவும் செல்வதுரை சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here