கோவிட்-19 தொற்று பாதிப்பால் கடந்த மூன்று மாதங்களாக வியாபாரமின்றி, வருமானமின்றி முடக்கி கிடக்கிறார்கள் நெகிரி மாநிலத்திலுள்ள இந்திய வர்த்தகர்கள் என நெகிரி மாநில இந்திய வர்த்தக தொழியல் சம்மேளனத் தலைவர் ஆர்.ராஜேந்திரன்.
இங்கு விஸ்மா நெகிரியில் நேற்று காலை நெகிரி மாநில அரசின் கல்வி, வர்த்தக தொழியல் முதலீட்டு துறை தலைவர் டத்தோ டாக்டர் முகமட் ரபாயி அப்துல் மலேக்குடன் நடைப்பெற்ற சந்திப்பு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், பாதிக்கப்பட்ட இந்திய வியாபாரிகள் மற்றும், அதலால் வேலை இழந்து தவிக்கும் தொழிலாளர்களுக்கு மாநில அரசாங்கம் உதவ வேண்டும் எனும் கோரிக்கையை மாநில அரசாங்கத்தின் கவனத்திற்கு முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக சுற்றுலத்துறை, ஹோட்டல், போக்குவரத்து சேவை, இந்திய உணவகங்கள், பள்ளி பேருந்து போன்று பலவாறன சிறுத்தொழில் வியாபாரங்கள் துறைகளில் பெரும் பாதிப்புக்கு ஆளாகி தடுமாறிக்கொண்டிருக்கும் வியாபாரிகள், குறிப்பாக இந்திய வியாபாரிகள் எதிர்நோக்கும் நிதி நெருக்கடி பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுக்காண மாநில அரசாங்கம் முனைப்புக்காட்ட வேண்டும் என ராஜேந்திரன் கேட்டுக்கொண்டார்.
இத்துறைகளில் வேலை செய்து வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், கடந்த மூன்று மாதங்களாக சம்பளமின்றி வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். அரசாங்கம் வழங்கிய கோவிட்-19 அவசர நிதி உதவி மற்றும் பொருளுதவி தற்காலிகமானதுதான்.
அதனால் முழு பாதிப்பை ஈடுக்கட்ட முடியாது என சுட்டிக்காட்டிய ராஜேந்திரன், குறிப்பிட்ட காலம்வரை இழந்த வருமானத்தை மீண்டு மீட்டி எடுக்கும் வரை பாதிக்கப்பட்டவர்கள் உரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும். இப்பாதிப்பால் மன உழைச்சலுக்கு ஆளாகிவுள்ள வர்த்தகர்கள், சிறு தொழில் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட, அம்மன் உழைச்சலிருந்து மீள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் தாம் நம்பிக்கை கொள்வதாக அவர் தெரிவித்தார்.
– நாகேந்திரன் வேலாயுதம்