மலேசிய இந்து சங்கம் காஜாங் வட்டாரப் பேரவையின் 35ஆம் ஆண்டுப் பொதுக் கூட்டத்தை வழிநடத்தப்பட்டு ஆண்டறிக்கையும் மற்றும் கணக்கறிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு 20/21 ஆண்டின் மலேசிய இந்து சங்கம் காஜாங் வட்டாரப் பேரவை ப. முரளிதரன் மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்றார் என்று சிலாங்கூர் மாநில தலைவர் தொண்டர்மணி மு. முனியாண்டி தெரிவித்தார்.
நேற்று காலை 10 மணியளவில் காஜாங், சுங்கை ஜெலோக் அதன் புதிய அலுவகத்தில் “ZOOM” செயலி வழியாக மலேசிய இந்து சங்கம் காஜாங் வட்டாரப் பேரவையின் 35 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மலேசிய இந்து சங்கம் காஜாங் வட்டாரப் பேரவையின் கடந்த ஆண்டு முதல் இவ்வாண்டு மே மாதம் வரை இங்குள்ள வட்டார ஆலயங்களின் பங்களியுடன் பல்வேறுபட்ட சமயம் மற்றும் சமூக நலத்திட்ட வாயிலாக சுமார் 65 நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதிலும், கோவிட் – 19 கொரோனா வைரஸ் நோய் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலகட்டத்தில் வட்டார ஆலயங்களின் ஆதரவுடன் மனிதநேய பி 40 மக்கள் நலத்திட்டங்கள் ஏற்று நடத்தியது தனிமுத்தியைப் பதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
20/21 ஆம் ஆண்டுக்கான செயலவை உறுப்பினர்கள் தேர்வுச் செய்யப்பட்டது. இதில் காஜாங் இந்து சங்கத்தின் தலைவர் ப.முரளிதரன், துணைத் தலைவர் க. சரவணன், செயலாளர் மா. தினகரன், துணைச் செயலாளினி அ. சூரியகலா, பொருளாளர் சு.மையூரி, ஆலய பொறுப்பாளர் ர.அழகேந்திரன், ஆலயத் துணைப் பொறுப்பாளர் பொ. நடராஜா, சமய பொறுப்பாளர் சி.பெருமாள், இளைஞர் பகுதித் தலைவர் எம். இளங்கோவன், மகளிர் பகுதித் தலைவி செ. கன்னிகா, செயலவை உறுப்பினர்கள் கு. விஜயன்,சி. பிரகாஷ் ம. சசிந்திரன், ஆ. தயாநந்த், கணக்காய்வாளர் டத்தோ கணேசன், சிவகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பொதுக் கூட்ட ஏற்புரையில் அடுத்து வரும் இளைய தலைமுறையினருக்கு சிறந்த முறையில் சமயக் கல்வி மற்றும் சமூக நல சேவை தொடர்பான வழிநடத்தப்படுமென்று மலேசிய இந்து சங்கம் காஜாங் வட்டார பேரவைத் தலைவர் முரளிதரன் பரமசிவம் வலியுறுத்தினார்.
அதன் தொடர்பாக நமது சமயத்தின் அடிப்படையான சமய நெறி முறைகள் பின்பற்றி நம் எதிர்க்கால் தலைமுறைக்கு இன்று மலேசிய இந்து சங்கம் முழு மூச்சாக செயல்பட்டு வரும் தருணமிது என்றார். இதனிடையே வட்டாரப் பேரவையின் அனைத்து நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக தேசியம், மாநிலம் உள்ளிட்டு காஜாங் வட்டார அளவிலான ஆலயங்கள், அரசுசாரா அமைப்புகள் தனித்துவமான உன்னத சேவைகளுக்கும் முன்னால் தலைவர்களுக்கும் செயலவை உறுப்பினர்களுக்கும் ஊடகவியலாளர் களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
பொதுக் கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் தொண்டர் மணி மூ. அசோகன், மாநில உதவித் தலைவர் சி. செல்வநாதன் மற்றும் காஜாங் வட்டார ஆலயக்குழுத தலைவர் சேது கருப்பன் கலந்து கொண்டனர்.
– எம்.அன்பா