‌ஷாஃபி அப்டால் பிரதமர் வேட்பாளர் ?

நாட்டின் அடுத்த பிரதமர் வேட்பாளராக சபா வாரிசான் கட்சி தலைவர் டத்தோஸ்ரீ ஷாஃபி அப்டாலை தேர்வு செய்வதற்க்கு தாமும் தமது ஆதரவாளர்களும் ஒப்பு கொண்டு இருப்பதாக சொல்லப்படும் தகவலை துன் டாக்டர் மகாதீர் முகமது உறுதிப்படுத்தினார்.

வாரிசான் தலைவர்கள் உடனான சந்திப்பின் போது இப்பரிந்துரைக்கு அமானா மற்றும் ஜசெக கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர் என்று அவர் கூறினார்.

நான் அவரது பெயரை முன் மொழிந்து இருக்கிறேன் என்பதால் அடிமட்ட ஆதரவாளர்கள் ஷாஃபியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுகொள்வர் என்று தாம் நம்புவதாக மகாதீர் சொன்னார்.

நான் இல்லாமல் போனால் நம்முடைய போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஒருவர் நமக்கு தேவை. இதன் காரணமாகவே ஷாஃபியை ஆதரிக்குமாறு நாங்கள் கேட்டு கொள்கிறோம்

நஜிப் மற்றும் முஹிடின் யாசின் ஆகியோருக்கு எதிரான தம்முடைய போராட்டத்திற்கு பக்க பலமாக வாரிசான் இருக்கிறது என்பதற்காக தான் ஷாஃபியை பிரதமர் வேட்பாளராக நாங்கள் ஆதரிக்கிறோம் என்று மகாதீர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here