சுவாரஸ்யமான கதைகளோடு சுற்றுலா இருக்கவேண்டும்!

சுற்றுலா, கலை கலாச்சார அமைச்சகம் (மோட்டாக்) ஒவ்வொரு மாநிலத்திலும் சாத்தியமான இடங்களை வரலாற்றுபின்னணியோடு விவரிப்பதன் மூலம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று அதன் அமைச்சர் டத்தோஶ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.

ஊக்குவிப்பதற்கான இடங்களை அடையாளம் காண்பதோடு மட்டுமல்லாமல், ஒவ்வோர் இடத்திலும் பாரம்பரிய உணவுகள் ஆடைகளை முன்னிலைப்படுத்த வேண்டும். ஏனென்றால் ஒவ்வோர் இடத்திற்கான வரலாற்றுப் பதிவுகள் மக்களுக்குக் எட்டாமல் சுவாரஸ்யமான பின்னணி கதைகளோடு இருக்கும் என்று பழைய கூச்சிங் கோர்ட் ஹவுஸ் கட்டடத்தில் உள்ள ரானி ப்ரூக் அருங்காட்சியகத்திற்குச் சென்றபின் அவர் கூறினார்.

சரவாக் நகரில் ராஜா ப்ரூக்கின் ஆட்சியின் போது முதல் ராணியின் கதையைச் சொல்லும் அருங்காட்சியகத்தின் உதாரணத்தை அவர் எடுத்துக் கொண்டார்.

புதிய இயல்பை ஏற்றுக்கொள்வதன் மூலம் மலேசியாவை பாதுகாப்பான சுற்றுலாத் தளமாக ஊக்குவிக்க முடியும். அவ்வகையில் உள்ளூர் மக்கள் சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்பட வேண்டிய, அறிவிக்க வேண்டிய சுவாரஸ்யமான இடங்களை ஆராய வேண்டும் என்றும்   நான்சி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here