ஜோகூர் சுல்தான் அமீனா மருத்துவமனை வார்டில் தீ – உயிர் சேதம் ஏற்பட்டிருக்கிறதா?

ஜோகூர் பாரு: இங்குள்ள சுல்தானா அமீனா மருத்துவமனையில் உள்ள ஒரு பெண்கள் வார்டில் இருந்து தீ விபத்து ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) பிற்பகல் 3.50 மணியளவில்  இந்த தீ விபத்து ஏற்பட்டது. இதுவரை உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால் சில நோயாளிகள் காயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள் பரவலாகி வருகின்றன

ஜோகூர் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் ஆர். வித்யானந்தனை தொடர்பு கொண்டபோது, தீ விபத்து குறித்து தனக்கு தகவல் கிடைத்ததாகவும், இப்போது மருத்துவமனைக்கு சென்று கொண்டிருப்பதாகவும்  கூறினார். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் தற்போது தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 2016 ஆம் ஆண்டில் இதே மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 நோயாளிகள் உயிரிழந்ததோடு  மேலும் நான்கு பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here