கூகுள் டுயோ மற்றும் கூகுள் மீட் சேவைகளில் க்ரூப் கால் வசதி அறிமுகம்

அந்த வரிசையில் கூகுள் நிறுவனம் தனது டுயோ, மீட் மற்றும் நெஸ்ட் ஹப் மேக்ஸ் உள்ளிட்ட சேவைகளில் குரூப் கால் மேற்கொள்ளும் வசதியை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த சேவைகளில் ஒரே சமயத்தில் ஒருவருடன் மட்டுமே வீடியோ கால்களை மேற்கொள்ள முடியும். நெஸ்ட் ஹப் மேக்ஸ் சாதனத்தில் கூகுள் டுயோ கொண்டு வீடியோ கால் மேற்கொள்வோர் முதலில் கூகுள் டுயோ மொபைல் செயலியில் க்ரூப் ஒன்றை உருவாக்கி அதில் நபர்களை சேர்க்க வேண்டும்.
இதன் ஹப் மேக்சிடம், “Hey Google, make a group call” என கூறினால், சாதனம் தானாக க்ரூப் கால் மேற்கொள்ள தொடங்கும். கூகுள் டுயோ க்ரூப் கால் அம்சம் எல்ஜி எக்ஸ்பூம் ஏஐ தின்க் டபிள்யூகே9 ஸ்மார்ட் டிஸ்ப்ளே, ஜெபிஎள் லின்க் வியூ மற்றும் லெனோவோ 8 இன்ச் மற்றும் 10 இன்ச் ஸ்மார்ட் டிஸ்ப்ளேக்களிலும் பயன்படுத்த முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here