சாத்தான் குளத்தில் இறந்துபோன இருவரும் வெறும் வணிகர்கள் அல்ல மனிதர்கள் – கவிஞர் வைரமுத்து

சாத்தான்குளம் மரணங்களுக்கு சத்தியத்தால் எழுதப்படுகிற தீர்ப்பு வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார். இன்றைய பரவலான் அதிர்ச்சி செய்தியாகவும் மனத்தைப்பிழியும் ரணமாகவும் இருக்கிறது. சாத்தான் குளம் என்ற ஊர்.

சாத்தான்குளத்தில் காவல்துறையினர் தாக்குதலில் தந்தை, மகன் இறந்தது குறித்து கவிஞர் வைரமுத்து எழுதிய வரிகளில் அவரின் தீர்ப்பு இருக்கிறது.

சாத்தான் குளத்தில் இறந்துபோன ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இருவரும் வெறும் வணிகர்கள் அல்லர்; மனிதர்கள்.

தந்தை – மகன் என்ற உறவுக்காரர்கள். அதனால்தான் இது தமிழகத் துயரம் என்பதைத் தாண்டி இந்தியத் துயரமாகிவிட்டது. பெருமைக்கும் பேருழைப்புக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டுக் காவல்துறையைச் சிறுமைக்கு உள்ளாக்கிவிட்டது சிந்தி முடித்த சிவப்பு ரத்தம் என்று தமது ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறார் அவர்.

கண்ணியமிக்க காவல்துறைக்கு மிகப்பெரிய களங்கம் இது என்கிறது தமிழகமண்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here