சீனாவில் கடுமையான வெள்ளம்

சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் வார இறுதியில் பெய்த மழையில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியானிங் கவுண்டியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட எண்ணிக்கையில் இருவரும் இதில் அடங்குவர். வெள்ளம்  நெடுஞ்சாலையைச் சேதப்படுத்திய பின்னர், பல வாகனங்கள் ஆற்றில் மூழ்யதில் இவர்கள் இறந்தனர்.

மேலும் 10 பேரைக் காணவில்லை, 7,000 க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான  சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து பெய்துவரும் பெருமழையால் தெற்கு சீனா பாதிக்கப்பட்டுள்ளது, அவசரநிலை மேலாண்மை அமைச்சகத்தின்படி குறைந்தது 78 பேர் கொல்லப்பட்டனர்  என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் 12 மில்லியன் பேர் சொத்து சேதம், சாலை மூடல், பிற இடையூறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 720,000 பேர் அவசரகால ஊழியர்களால் வெள்ள நீரிலிருந்து மீட்கப்பட்டு இடம் பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வெள்ள பருவத்தின்போது 3.6 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநில ஊடகங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வீடியோக்களில்  நீரில் மூழ்கிய வயல்களையும்  மீட்பவர்களையும் ,முதுகில் சுமந்துவரும் காட்சியும் காணமுடிந்தது.

அருகிலுள்ள சோங்கிங்கின் மெகாசிட்டியில், பாதுகாப்புக் கோட்டிலிருந்து ஐந்து மீட்டருக்கு மேல் நீர் உயர்ந்திருக்கிறது.

வெளியேற்றப்பட்டவர்களுக்கு கூடாரங்கள், படுக்கைகள் உள்ளிட்ட வெள்ள நிவாரண சாதனங்களுக்கு குறைந்தபட்சம் 200 மில்லியன் யுவான் செலவழிக்க சீனாவின் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று அவசர அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here