டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தல் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த நபர் கைது

தொழில் அதிபர் டத்தோஸ்ரீ ஆறுமுகம் ஒரு கும்பலால் கடத்தப்பட்டு பின்னர் அவருடைய உடல் ஒரு புதரில் இருந்து மீட்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ரவாங்கை சேர்ந்த ஷேக் இஸ்மாயில் பின் ஷேக் ஹசானை இன்று காலை 7.30 மணியளவில் புக்கிட் செந்தோசா குவாலா குபு பாருவில் கைது செய்யப்பட்டார்.

இவர் விசாரனைக்காக ஏழு நாள் தடுத்து வைக்கப்பட்டார் என்று சிலாங்கூர் மாநில எஸ்ஏசி டத்தோ பட்சில் அமாட் தெரிவித்தார்.

மேலும் ஒரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். விக்னேஸ்வர் த/பெ நாகேந்திரன் (தம்பி என்ற வினோட்) இவருடைய கடைசி முகவரி ரவாங் கிரின் பார்க் சிலாங்கூர் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here