பொருளாதார மீட்சியே முதன்மையாகும்

பொருளாதாரம் எழ்ச்சிபெறாவிட்டால் நாட்டின் வங்கி  நிதி அமைப்புகள்  பெருநிதியிழப்பை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் முன்வைத்த கருத்தை வல்லுநர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

மலேசியாவின் தேசிய அகாடமியின் வட்டார மேம்பாட்டுக் குழுவின் தலைவரான பேராசிரியர் டாக்டர் கே.குபேரன் விஸ்வநாதன்  இது குறித்து கூறியிருக்கிறார்.  பொருளாதாரம் மறுதொடக்கம் செய்யப்பட்டாலும் இடைக்காலம் கடினமாகவே இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

கோவிட் -19 தொற்றுநோயால் பொருளாதாரத்தை நிலைப்படுத்த  2020, 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பற்றாக்குறைக்கான நிதியை செலவழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

வேலைவாய்ப்பு, வணிக நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையை வழங்குவதன் மூலம் மக்களை வேலைக்கு அமர்த்துவதும் இதில் ஒன்றாக இருக்கும்.

வேலையில்லாத பட்டதாரிகளை  உட்கட்டமைப்பு பயிற்சித் திட்டங்களில் சேர்த்துக் கொள்ளலாம்.  இது, இறுதியில் பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு நீண்ட கால வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கும். விவசாய உற்பத்தியை ஊக்குவித்தல், தொழில்துறை,  விவசாயப் பொருட்களுக்கான புதிய சந்தைகளை உருவாக்குதல், குறைந்த திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களைக் குறைப்பதும் அடங்கும்.

பொருளாதாரப் பிரச்சினை என்பது உலகப் பிரச்சினை . இதனால் 2020 ஆம் ஆண்டில் மலேசியப் பொருளாதாரமும்  சுமார் 5 விழுக்காடு  சுருங்கிவிடக்கூடும்.

எவ்வாறாயினும்,  இரண்டாவது அலை நோய்த்தொற்றுகள் இல்லாவிட்டால் 2021 இல் 4 விழுக்காடு மீட்பு பெறும். 2022 இல் 6 விழுக்காடாக உயரும்  சாத்தியமிருப்பதாக முஹிடின் கூறுகிறார்.

குறைந்த வருமானம் உடையவர்களை  அவர்களின் வருமான ஆதரவுடன் பாதுகாக்குமாறு குபேரன் அரசாங்கத்தை வலியுறுத்தினார். வேலையற்றவர்களுக்கு ஆண்டு இறுதி வரை மாதத்திற்குக்  குறைந்தது 500 வெள்ளி வழங்கப்பட வேண்டும் என்றார் அவர்.

பொருளாதாரத்தில் செலவினங்களைப் பராமரிப்பதன் மூலமும், பொருட்கள், சேவைகளுக்கான தேவையை உருவாக்குவதன் மூலமும் பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கலாம்.

 

தயாரிப்புகள் அல்லது சேவைகளை வாங்க மக்கள் முன்புபோல் விரும்பவில்லை அல்லது பொருளாதாரத்தின் நிலை காரணமாக இப்படித்தான் இருக்கிறது என்று குபேரன் கூறினார்.  அவர்களின் கவலைகள் எல்லாம்  உடல்நலம்  வேலை பாதுகாப்பு குறித்தே பேசப்படுகிறது.

பொருளாதார மீட்பு தொடங்குவதற்கு முன் 2021 நடுப்பகுதி வரை சிறப்பாகத் தெரியவில்லை. என்று ஷம்சுதீன் கூறினார். நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிக்கவும், ஊதிய மானிய திட்டத்தை மறு ஆய்வு செய்யவும், வங்கிக் கடன் தடைக்காலத்திற்கு நீட்டிப்பு வழங்கவும் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

உள்ளூர் அல்லது இறக்குமதி தயாரிப்புகளுக்கு மலிவு விலையில் தயாரிப்புகளை ஊக்குவிப்பதன் மூலமும் விற்பதன் மூலமும் நுகர்வோரின் நம்பிக்கையை அதிகரிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

வழங்கப்படும் உதவிகளின் சதவீதம் மற்ற நாடுகளை விட 75 விழுக்காடு முதல் 80விழுக்காடு வரை குறைவாக உள்ளது.  உதவிகள் இன்னும் 15 விழுக்காட்டை எட்டவில்லை என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

இது, திரும்பப் பெறப்பட வேண்டும், ஏனெனில் இது ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், தொற்றுநோய் காலத்தின் முழுவதும் தங்கள் வணிகத்தைத்தொடர முதலாளிகளுக்கு இது நம்பிக்கையையூட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here