விரலுக்கு ஏற்ற வீக்கம்?

மலேசியர்களின் வாங்கும் சக்திக்கு ஊட்டச்சத்து போதவில்லை என்றுதான் கூறவேண்டியிருக்கிறது. ஆனாலும் விற்பனை மையங்களில் கூட்டம் சன்னமாகவே கூடிவருக்கிறது என்பது நல்ல அறிகுறியாகத்தான் இருக்கிறது. இதற்கேல்லாம் ஜூலை மாதம்தான் ஆரப்பப்புள்ளியாக இருக்கப்போகிறது.

விற்பனை, தொழில் வளர்ச்சி மஞ்சள் விளக்காவே இருப்பதால் இன்னும் பொருளாதாரப் புழக்கம் மாமூல் நிலைக்குத் தயாராகவில்லை என்று தெளிவாகவே தெறிகிறது.

தொழில்கள், கடந்த வார விதைபோலவே துளிர் விடத்தொடங்கியிருக்கிறது. விருத்தியை நோக்கி நகர இன்னும் காலம் கனியவில்லை. புதிய பிறப்பு போலவே கவனிக்க வேண்டிய கட்டத்தில் சில தொழில்கள் இருக்கின்றன. பல சிறு தொழில்களுக்கு மூச்சுக்கவசம் தேவைப்படுகிறது.

பொறுமையாக இருக்கலாம், இருக்க வேண்டும் என்று மக்கள் நினைத்தாலும் வாங்கும் சக்தி இல்லாதபோது வாழ்வாதாரத்தை நகர்த்துவது எப்படி என்றும் பலர் கேட்கின்றனர்.

வாங்கும் சக்தி குறைந்துவிட்டதால். உற்பதியும் குறைந்திருக்கிறது. உற்பத்திக்கான ஆள்பலமும் குறைந்திருக்கிறது. இதனால், தேர்ச்சிப் பெற்றவர்களின் வருமானமும் குறைக்கப்பட்டிருக்கிறது.

அனைத்திலும் குறைவு என்பதுதான் பதிலாக இருக்கும்போது விலைவாசி மட்டுமே தன்மூப்பாய் கூடிக்கொண்டிருக்கிறது. விலைவாசி கூடினால் வாங்கும் சக்தி எப்படி வளரு

விலைவாசிக்கு எரிபொருள் காரணம் என்பதெல்லாம் மலை ஏறிவிட்டது. அப்படியானால் எதுதான் காரணம். விலைவாசி பாரத்தை முகத்தில் அழுத்தினால் மூச்சுத்திணறல் ஏற்படத்தான் செய்யும்.

சுற்றுலாத்துறைகளை நம்பித்தான் பல தொழில்கள் இருக்கின்றன. சுற்றுலாத்துறை மீட்சி பெறுவதே பொருளாதார மீட்சிக்கான அடையாளமாகவும் தெரியும்.

விரலுக்கு ஏற்ற வீக்கம் என்பதெல்லாம் பொய்த்துவிட்டது. வீக்கத்தைத் தாங்கிக்கொள்ளும் சக்தி விரலுக்கு இல்லாமல் போய்விட்டது. விரலா வீக்கமா? இரண்டுமே மக்களுக்குச் சுமையாகிவிட்டது.

பல நிறுவனங்கள் ஒரே இடத்தில் இரண்டாம் வர்த்தகம் பற்றியும் யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். 50 விழுக்காடு கூட தேறாத வணிகங்களின் வருமானத்திற்கு மாற்றுவழி மிக அவசியமாகிவிட்டது.

இப்போது மக்களுக்குத்தேவை அரசாங்கத்தின் உதவி. இன்னும் சில மாதங்களுக்காவது அது தொடரப்படவேண்டும் என்பதுதான் இப்போதைய கோரிக்கை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here