டத்தோஸ்ரீ அந்தஸ்தை கொண்டிருக்கும் தொழிலதிபரை கடத்தி கொலை செய்த வழக்கில் சந்தேக நபர் நேற்று போலீஸில் சரணடைந்தார்.
விக்னேஸ்வரர் நாகேந்திரன் என்னும் அந்த சந்தேக நபர் நேற்று ரவாங் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மேல் விசாரணைக்காக போலீஸ் அவரை தடுத்து வைத்திருப்பதாக சிலாங்கூர் மாநில குற்றப் புலன்விசாரணை பிரிவு தலைவர் ஃபாட்சில் அஹமாட் ஓர் அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.
அந்நபரை விசாரணைக்காக தடுக்க வைக்க இன்று காலை நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. இன்று (ஜூன் 30) முதல் ஜூலை 6ஆம் தேதி வரை (7 நாட்கள்) அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஜாலான் ரவாங் பெஸ்தாரி ஜெயா பத்து 27 எனும் இடத்தில் உள்ள ஓர் புதறில் டத்தோஸ்ரீயின் சடலம் மீட்கப்பட்டதை தொடர்ந்து இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவரின் மரணம் தொடர்பான உண்மை விசாரணைக்கு பிறகே அறிவிக்கப்படும். அதோடு ஏற்கெனவே இவ்விவகாரம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்ட ஒருவரை மேலும் 7 நாட்களுக்கு தடுத்து வைத்திருப்பதாக அவர் கூறினார்.