தேமு வேட்பாளருக்கே முழு ஆதரவு – பெர்சத்து அறிவிப்பு

சினி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முகமட் ஷாரிம் முகமட் ஸைனுக்கே முழு ஆதரவு வழங்குவதாக பெர்சத்து அறிவித்துள்ளது.

பெரிக்காத்தான் நேஷன்ல் இத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும். பெக்கானில் செயல்பட்டு வரும் பெர்சத்து கட்சியின் தலைவர்கள் ஷாரிமிம் வெற்றிக்காக பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்று பிரதமரும் பெர்சத்து தலைவரருமான டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.

ஜூலை 4ஆம் தேதி நடைபெறவிருக்கும் சினி இடைத்தேர்தலில் மொத்த வாக்காளர்களான 20,990 பேர் தேசிய முன்னணிக்கே தங்களின் ஆதரவை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பெரிக்காத்தான் கூட்டணியில் அரசியல் முதிர்ச்சி நிலையை காண்பிக்க இதுவே சரியான் தருணம். அதோடு இக்கூட்டணியின் முதல் வெற்றியை இந்த இடைதேர்தல் மூலம் நிரூபிக்க வேண்டும்.

பெரிக்காத்தான் சார்பில் தேமு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரின் வெற்றி இக்கூட்டணியின் ஆட்சி முறை குறித்த ஒரு தெளிவை மக்களுக்கு ஏற்படுத்தும். நாட்டின் மேம்பாட்டிற்கும் மக்களின் நல்வாழ்விற்கும் தமது அரசாங்கம் பாடுபடுவதை மக்கள் அறியக் கூடும்.

இந்த இடைத்தேர்தல் சினி வட்டாரத்தை மட்டும் மேம்படுத்துவது அல்ல. மாறாக தேசிய ரீதியிலான அரசியல் சூழலையும் தான் என்று டான்ஸ்ரீ முஹிடின் கூறினார்.

இதனிடையே, சினி இடைத்தேர்தலில் சுயேட்ச்சையாக களமிறங்கியுள்ள வேட்பாளர் தெங்கு ஸைனுல் ஹிஷாம் தெங்கு ஹூசினுக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருந்தார்.

முன்னாள் பிரதர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் நாடாளுமன்ற தொகுதியான பெக்கானின் கீழ் இயங்கும் சினி சட்டமன்றத்தில் ஷாரிம் (தேமு) தெங்கு ஸைனுல் சுயேட்ச்சை, முகமட் ஷூக்ரி ஆகியோர் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here