நாட்டின் முக்கிய பேச்சாக சுற்றுலா!

நாட்டின் முக்கிய பேச்சாக இருப்பது சுற்றுலா! எங்கு திரும்பினாலும் சுற்றுலா என்பதுதான் பேச்சாக இருக்கிறது என்றால், மக்களின் மனத்தில் நிம்மதி குறைந்திருக்கிறது என்றுதான் அர்த்தமாகிறது.

நூறு நாட்கள் சிறைவாசம்போல் கொரோனா அடிமைப்படுத்தி வைத்திருந்திருந்தது. இப்போது அதிலிருந்து விலக்கு கிடைத்திருக்கிறது. சுகதார அமைச்சின் தீவிர நடவடிக்கைகளால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிடுகின்றனர். இருட்டறையில் கிடந்தவர்களுக்கு வெளிச்சம் கிடைத்ததுபோல் உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

இந்த வெளிச்சம் சுற்றுலாவின் மூலம் மேலும் விரிவடைஅயும். இதற்கு ஒரே வழி என்றால் அது சுற்றுலாவாகத்தான் இருக்கும். வெளிநாட்டிற்குப்போவதுதான் சுற்றுலா அல்ல. அடுத்த மாநிலத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாதவர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள் என்பதும் முழுமையான உண்மை.

இப்படிப்பட்டவர்கள் சிக்கன விடுமுறையில், அதிகச் செலவில்லாமல் அவசியம் சுற்றுலா போகத்தான் வேண்டும். அப்படிப் போனால்தான் நூறுநாள் இறுக்கத்தின் கட்டுகள் தளர்வு பெறும். இதற்குப் பொருளாதாராம் ஒத்துழைக்காமல் இருப்பவர்கள் அடுத்தடுத்த மாதம் பயணம் போக திட்டமிடலாம். சிறிதாகச் சேமிக்கலாம். முறையான முன்னெற்பாடுகளுடன் செல்வது மிக அவசியம்.

உள்ளூரில் எங்கு சென்றாலும் அக்கம் பக்கத்தார், உறவினர்கள், தேவை ஏற்பட்டால் காவல் நிலையத்திலும் தெரிவிப்பது நல்லது. அப்போதுதான் நீங்கள் எங்கு சென்றிருக்கிறீர்கள் என்பது தேவைக்கு உதவும்.

முதலில் தேவை, உள்நாட்டுசுற்றுலா. உள்நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் இடங்களைக்கூட எட்டிப்பார்க்காதவர்கள் அவசியம் சுற்றுலாத்திட்டத்தில் பங்கேற்பது மிகவும் நல்லது. இதனால் குடும்ப நலன் மேலோங்கும்.

முயற்சியுடன் சுற்றுலா எண்ணத்தை விதையுங்கள். உள்ளூர் சுற்றுலா நிச்சயம் அமையும். பள்ளிப்பிள்ளைகளின் புரிதலுக்கு சுற்றுலா மிகுந்த நன்மை தரும்.

ஒரே கல்லில் பல மாங்காய்கள் என்பதுபோல, சுற்றுலாத்துறை மேம்படவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. பல சலுகைளும் வழங்குகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here