மாவட்டத்தில் போதைப்பொருள் வைத்திருந்த ஆண் மருத்துவரும் அவரின் உதவியாளரும் , கைது செய்யப்பட்டனர். பெட்டாலிங் ஜெயா காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
காரில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பையில் 70 கிராம் கஞ்சா இருப்பதை அறிந்து போலீசார் அதனை மீட்டனர்.
28 வயதான மருத்துவர் அரசு மருத்துவமனையில் பணியாற்றுகின்றவர். 26 வயதான பெண் ஒரு கிளினிக்கில் பணிபுரிகின்றவர் என போலீஸ் அதிகாரி நிக் எசானி கூறினார்.
போதைப்பொருள் உட்கொண்டிருக்கும் சந்தேகத்தில் மருத்துவரும் பரிசோதனைக்கு ஆளானார்.
இவர்கள் கடந்த மூன்று மாதங்களாக பெட்டாலிங் ஜெயாவில், போதைப்பொருள் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக இவ்விருவரையும் தடுத்து வைக்கவும், போதைப்பொருள் விநியோகத்தில் அவர்கள் எந்த அளவிற்கு ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கண்டறியவும் ஏழு நாள் தடுப்புக்காவல் உத்தரவும் பெறப்பட்டுள்ளது.
ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39ஏ இன் கீழ் இருவரும் விசாரிக்கப்படுவார்கள். குற்றம் நிரூபிக்கப்டால் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை , ஆயுள் தண்டனையுடன் கசையடியும் கிடைக்க சட்டம் வகைசெய்கிறது.