தலை, கழுத்து பகுதிகளில் கத்தி குத்து.. அந்நிய நாட்டு ஆடவர் கொலை

தலை மற்றும் கழுத்து பகுதிகளில் கூர்மையான கத்தி குத்துடன் அந்நிய நாட்டு ஆடவர் ஒருவர் இங்கு செண்டாயான் பெட்ரோல் நிலைய கார் கழுவும் கடை அருகே கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்க காணப்பட்டான்.

நேற்று விடியற்காலை 4.05 மணியளவில் உடல் ஒன்று அவ்விடத்தில் கிடப்பது குறித்து பொது மக்கள் கொடுத்த தகவலை தொடர்ந்து, அவ்விடத்துக்கு போலீஸ் விரைந்தது என சிரம்பான் மாவட்ட போலீஸ் படை துணை தலைவர் சுப்ரிடெண்டன் முகமட் ரோஸ்லி இஷாக் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

22 வயது மதிக்கதக்க அந்த அந்நிய நாட்டு ஆடவன் உடல் அருகே கத்தி மற்றும் இரும்பு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட, இந்த இரு ஆயுதங்களை கொண்டுதான் அவர் தாக்கப்பட்டுள்ளார் என போலீஸ் சந்தேகப்படுகிறது.

அந்த ஆடவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு சிரம்பான் துவாங்கு ஜபார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் போலீஸ் விசாரனைக்கு உதவ கீழ் காணும் போலீஸ் விசாரனை அதிகாரி துணை சுப்ரிடெண்டன் ரஷ்லியுடன் 012-2512574 அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்ப்புக் கொள்ளுமாறு பொதுமக்களை முகமட் ரோஸ்லி கேட்டுக்கொண்டார்.

– நாகேந்திரன் வேலாயுதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here