எச்சில் மனிதர்களா?

வயதாகும்போது சிங்கம் அசிங்கமாகலாம் என்பது நகைச்சுவைக்காகக் கூறப்படுவது. ஆனால், அசிங்கம் சிங்கமாகாது என்று சொன்னால் நகைச்சுவையா? சிந்தனையா?

அந்நிய கலாச்சாரத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளும்போது அதில் உள்ள சாதக பாதகங்கள் புரிந்திருக்க வேண்டும்.

அதில், முக்கியமாகக் கலாச்சார  பண்பாட்டுக்கூறுகள் முக்கியமாகக் கவனிக்கப்படல் வேண்டும் என்பது ருக்குன் நெகாரா கோட்பாட்டில் இருக்கிறது.

அயல்நாடுகளின் கலாச்சாரமாகக் கடைப்பிடிக்கப்படும் பலவற்றில் ஒரு செயல் நம்நாட்டிற்கு ஏற்றதாக இல்லை. குறிப்பாக சிலைகள் மீதும், வீடுகள், கார்கள் மீதும் சாயத்தை ஊற்றிச்செலவ்து, அல்லது உடைமைகளைச் சேதப்படுத்துவது.

இக்கலாச்சாரம் இதுவரை கடன் பெற்று திரும்பத்தர இயலாதவர்கள் வீட்டிலும், அரசியல், வணிக காழ்ப்புணர்ச்சியாலும் கையாளப்படுவது மகா கேவலமான செயலாகும்.

இதிலும் ஒரு வரலாற்றைகாட்டும் ஞாபகமாக விளங்கும் சிலையின் மீது சாயத்தை விட்டெறிவது காட்டுமிராண்டிகள் நாகரீகம் என்றால், அவர்கள் உண்மையான மலேசியர்களாக இருக்க முடியாது.

பினாங்குத்தீவை அடையாளைப்படுத்திய சர் பிரான்சிஸ் லைட் அப்படி என்ன துரோகம் செய்துவிட்டார்? அவரின் சிலைமீது சிவப்புச்சாயம் பூசப்பட்டிருப்பது மிகக் கேவலமான செயல்.

கோழைகளுக்கு எப்போதும் பிரச்சினைகளை எதிகொள்ள தைரியம் இருக்காது. அப்படிப்பட்டவர்கள் செய்யும் கோழைத்தனமான காரியங்களில் ஒன்றுதான் இது.

இப்படிச்செய்வதால் எந்த அடையாளத்தைக் காட்டப்போகிறார்கள் என்பது விளங்கவில்லை. இப்படிச்செய்கின்றவர்கள்  எப்படி நல்ல குடிமகன்களாக இருக்க முடியும்? இப்படி நடந்துகொண்டதால் எதைத்தான் சாதிக்கப்போகிறார்கள்.

எதிர்ப்புகளைக் காட்ட ஆயிரம் வழிகள் இருக்கின்றன. சர் பிரான்சிஸ் லைட் என்ன பாவம் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here