குணச்சித்திர நடிகர் கலைமாமனி காந்திநாதன் மறைவு

மலேசியாவின் பிரபல குணச்சித்திர நடிகர் கலைமாமனி காந்திநாதன் அம்பாங் மருத்துவமனையில் இன்று காலமானார். கலைஞர் மற்றும் திரைப்பட நடிகர் மனு இராமலிங்கத்தின் உடன் பிறவா தம்பியான காந்திநாதன் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரம் என்று எல்லா பாத்திரங்களிலும் மிக சரியாகப் பொருந்தி வெகு இயல்பான நடிப்பை வழங்கிய ஆற்றல்மிகு பிறவி கலைஞர்.

தமிழ் மட்டுமின்றி மலாய் தொலைக்காட்சி நாடங்கங்களிலும் மிக அற்புதமான நடிப்பை வழங்கியவர். பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பரங்களில் தனி முத்திரை பதித்தவர்.

இவரது மறைவு மலேசிய கலைத்துறைக்கு ஒரு மாபெரும் இழப்பாகும். நட்பு பாராட்டுவதிலும் பழகுவதிலும் இனிமையானவர். உண்மை வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத ஒர்ர் அற்புதமான மனிதர் காந்திநாதன்.

Click the Link Below :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here