வெளிநாட்டிலிருந்து மலேசியாவிற்குள் நுழைவோருக்கான கோவிட் -19 ஸ்கிரீனிங் சோதனைகளுக்கான கட்டண கட்டமைப்பை சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஆடாம் பாபாவின் கூற்றுப்படி, விமான நிலையங்களில் உள்ள எந்தவொரு நுழைவு வாயிலிலும் நுழைவு அனுமதி பெறுவதற்கு முன்பு அவர்கள் சோதனைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
அதுமட்டுமின்றி, மலேசியக் குடிமக்கள் அல்லது வெளிநாட்டவரும் எந்த அரசு மருத்துவமனை அல்லது அரசு கிளினிக்கில் கோவிட் -19 ஸ்கிரீனிங் பரிசோதனையை மேற்கொள்ளும்போது அதற்கான கட்டணங்கள் செலுத்தப்படவேண்டும்.
கட்டணங்கள் பல்வேறாக இருக்கும் . கோவிட் -19 சோதனைகள் வகைப் பிரிக்கப்பட்டுள்ளன, மலேசியருக்கு 150 வெள்ளியும் வெளிநாட்டினருக்கு 250 வெள்ளி எனவும் செலவாகும். விரைவான சோதனைக்கு 60 வெள்ளி (மலேசியர்) , 120 வெள்ளி (வெளிநாட்டவர்), ஆன்டிபாடி விரைவான சோதனைக்கு 30 வெள்ளி (மலேசியர்), 60 வெள்ளி (வெளிநாட்டவர்) எனவும் இருக்கும்.
13 நாட்களுக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட , வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் மீது ஆன்டிபாடி விரைவுச் சோதனை பயன்படுத்தப்படுகிறது என்றும் ஆடாம் கூறினார்.
இருப்பினும், கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்ற குடிமக்களும் உள்ளனர், அவற்றில் பின்வருவன அடங்கும்.
1) உத்தியோகப்பூர்வ வணிகத்தில் வெளிநாட்டிலிருந்து மலேசியாவிற்குள் நுழையும் அரசு அதிகாரிகள், ஆதாரமாகக் கொண்ட கடிதம் சமர்ப்பிக்கவேண்டும்.. இந்த விலக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நீட்டிக்கப்படாது.
2) வெளிநாட்டிலிருந்து மலேசியாவிற்குள் நுழைந்த ஊனமுற்றோர் , அவர்களின் OKU அட்டையை சமூகநலத்துறையிடம் காட்ட வேண்டும். ஊனமுற்றோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை.
3) மலேசிய மாணவர்கள், தனியார் அல்லது கல்வி உதவிப் பெற்றவர்கள், மலேசியாவிலிருந்து முதன்முறையாக வெளிநாட்டிற்குச்செல்கின்றவர்கள் அவர்கள் படிப்புக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.