கோவிட் -19 தொற்றுநோய்க்கு காரணமான கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்ட குரங்குகள் 28 நாட்களுக்குப் பிறகு தொற்றிலிருந்து விடுவிக்கப்பட்ட அறிகுறியைத் காட்டின என்று சயின்ஸ் இதழில் ஒரு சீன ஆய்வு தெரிவித்துள்ளது.
குரங்குகளில் காணப்பட்ட ஆரம்ப நோய் எதிர்ப்பு சக்தியைக் காட்டினாலும், மனிதர்களில் இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை .
தொற்றுநோயின் தொடக்கத்தில் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்கள் மீண்டும் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்களா என்பதை அறிய, மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட காத்திருக்க வேண்டியது அவசியம்.
பீக்கிங் யூனியன் மருத்துவக் கல்லூரியின் விஞ்ஞானிகள், ரீசஸ் மாகாக்ஸில் ஒரு பரிசோதனையைச் செய்தனர், அவை மனிதர்களுடனான ஒற்றுமக்கூறுகளைக் காரணமாக வைத்தனர். அப்பரிசோதனையில் தொற்றுக்கெதிரான குறுகிய கால நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதா என்பதைக் கண்டறிந்தனர்.
SARS-CoV-2 தொற்று, மூச்சுக்குழாயைப் பாதிக்கும் மிதமான அறிகுறிகளை உருவாக்கியது. இது குணமடைய இரண்டு வாரங்கள் ஆனது.
முதல் நோய்த்தொற்றுக்கு இருபத்தி எட்டு நாட்களுக்குப் பிறகு, ஆறு குரங்குகளில் நான்கு குரங்குகள் குறைந்த அறிகுறியில் இருந்தன, ஆனால், இந்த நேரத்தில், வெப்பநிலையில் சிறிது உயர்வு இருந்தது. ஆனாலும் தொற்றின் வீரிய அறிகுறியைக் காட்டவில்லை என்று ஆய்வு கூறியது..
அடிக்கடி மாதிரிகள் எடுத்துக்கொள்வதன் மூலம், குரங்குகளின் தொற்றின் தன்மை மூன்று நாட்களுக்குப் பிறகு கூடியிருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த நோயெதிர்ப்பு பாதுகாப்பு எவ்வளவு காலம் உள்ளது என்பதைப் பார்க்க கூடுதல் சோதனைகள் தேவை என்றும் ஆராய்சியாளர்கள் தெரிவித்தனர்.