பெட்ரோல் விலை 4 காசு குறைந்துள்ளது

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

ரோன் 95, 97 பெட்ரோல் 4 காசு குறைந்துள்ளது. லிட்டருக்கு 1.95 காசிலிருந்து தற்போது 1.65 காசாக குறைந்துள்ளது.

டீசல் விலை 2 காசு குறைந்து லிட்டருக்கு 1. 84 காசு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை ஜூலை 10ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி அமலுக்கு வருகிறது.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களால் எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

உலகளவில் கச்சா எண்ணெயின் விலை மாற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் முழுமையான கண்காணிப்பில் இருக்கும். மக்கள் சுமை இல்லாமல் சுபிட்சமாக வாழ்வதை அரசாங்கம் உறுதிப்படுத்தும் என்றும் நிதியமைச்சு கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here