மின்சாரக்கழிவு டிசம்பர் வரை நீட்டிப்பு

மக்களின் சுமைகளைகுறைக்க அரசாங்கம் பல வழிகளைக் கையாண்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 10 ஆம் நாள் என்றால் முகத்தின் மலர்ச்சியில் தொய்வு ஏற்பட்டுவிடும். அந்த நாளில் அல்லது அடுத்தடுத்த நாட்களில் கடிதப்பெட்டியில் போடப்படும் மின்சார பில்லின் கட்டணம் என்ன என்பதுதான் யோசனையாகவே இருக்கும்.

இவ்வளவு கட்டணம் ஏன்? இதில் வீட்டில் உள்ளோரைக் கடிந்துகொள்வது வாடிக்கையானதுதான்.

கோவிட் -19 காலத்தில் இவற்றின் மீதான கலக்கம் மிக அதிகமாகவே இருந்தது என்பதும் உண்மைதான்.

ஒருபக்கம் வேலை பாதிப்பு, மறுபக்கம் வருமானம் பாதிப்பு, விலையேற்றம் என்று எதைத்தொட்டாலும் பிரச்சினையாகவே இருந்தது. இன்னும் தவணைப்பணம் என்றெல்லாம் ஒருபக்கம் மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் அதிகமாகவே இருந்தன. இன்னும் இருந்தும் வருகின்றன.

இந்தக் கடுமையான நேரத்தில் அரசாங்கம் பல வகைகளில் கை கொடுத்துக்கொண்டிருக்கிறது என்பதில் மக்கள் பெருமூச்சு விடுகின்றனர் என்பதும் கூறப்படத்தான் வேண்டும்.

முன்று மாதங்களுக்கு  நீட்டிக்கப்பட்டிருந்த மின்சாரக் கட்டணக்கழிவு டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது என்பது மக்கள் துன்பத்தில் அரசின் பங்களிப்பு  அக்கறையாய் புலப்படுத்தியிருக்கிறது.

கட்டணக்கழிவு 2 முதல் 5 விழுக்காடு அக்டோபர் முதல் டிசம்பர் வரை வழங்கப்படும் என்று அதன்  இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் சம்சுல் அனுவார் நசாரா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here