முன்னணி பணியாளர்களுக்கு நன்றி கூறும் புனித பயணம்

கோவிட் 19 காலக் கட்டத்தில் மக்களின் பாதுகாப்பிற்காக இரவு பகல் பார்க்காமல் அனுதினமும் உழைத்த முன்னணி பணியாளர்களுக்கு நன்றி கூறும் வகையில் பெட்டாலிங் ஜெயா ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் செப்டர் (ஹோக் பிஜே செப்டர்) நெடுந்தூர பயணம் மேற்கொள்கிறது.

இன்று காலை பெட்டாலிங் ஜெயா ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் மையத்திலிருந்து குவாந்தானுக்குச் சென்று அங்கிருந்து அலோர்ஸ்டாருக்குச் சென்று, அங்கிருந்து ஈப்போவிற்கு வந்து, ஈப்போவிலிருந்து கோலாலம்பூருக்கும் என ஐந்து நாட்களுக்கு பயணம் செய்வதாக அதன் தலைவர் அஸ்னுல் ஷாஹாருடின் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட 1,500 கிலோ மீட்டர் தூரம் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. மீட்சியுறும் நடமாட்டக் காடுப்பாட்டு ஆணையின் போது மோட்டார் சைக்கிள் அணிவகுப்பிற்கு அரசாங்கம் விதித்துள்ள அனைத்து எஸ்ஓபிகளும் முறையாக பின்பற்றப்பட்டதாக டத்தோஸ்ரீ பாலா கூறினார்.

33 மோட்டார் சைக்கிளோட்டிகள் பங்கேற்கும் இப்பயணத்தில் உதவியாளர்கள் உட்பட 42 பேர் புறப்பட்டனர்.  இன்று காலை பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறை தலைவர் நிக் எஸானி முகமட் பைசல் கோடி அசைக்க மோட்டார் சைக்கிளோட்டிகள் பயணத்தை தொடங்கினர்.

முன்னணி பணியாளர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த பயணம் பாராட்டுதலுக்குரியது என்று நிக் எஸானி கூறினார். அதோடு எஸ்ஓபிகளை முறையாக பின்பற்றி செயல்படும் இக்குழுவினருக்கு பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here