எந்நேரத்திலும் பொது தேர்தலுக்கு தயார் – அஸ்மின் அலி

டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் எந்நேரத்திலும் பொதுத் தேர்தலை நடத்த தயார் என்று அனைத்துலக வர்த்தக தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார்.

நாட்டின் பொது சுகாதாரம், அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றின் சவால்களை அரசாங்கம் முறையாக கையாண்டு வருகிறது. எனவே இவ்வாண்டு அல்லது அடுத்தாண்டில் பொது தேர்தல் நடத்தப்படும் என்று ஜோகூர் பாருவில் நேற்று இரவு நடைபெற்ற விருந்தோம்பல் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறினார்.

பொதுத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது.

கடந்த 22 மாதங்கள் ஆட்சி புரிந்த பக்காத்தான் ஹராப்பான், மக்கள் எதிர்நோக்கிய பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை. மக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்த்து அவற்றை சரி செய்வது தான் பெரிக்காத்தான் நேஷனலின் முதன்மை நோக்கம்.

நாங்கள் நாட்டை நாசம் படுத்த வில்லை. இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் நல்வாழ்விற்கும் செயல்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறோம். குறிப்பாக நாட்டின் மேம்பாட்டிற்காக அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் பல திட்டங்கள் உள்ளன என்று அஸ்மின் அலி கூறினார்.

கோவிட் 19 தாக்கத்தால் மலேசிய பொருளாதார ரீதியில் சரிவை கண்டிருந்தாலும் அரசாங்கம் அறிவித்த பொருளாதார திட்டத்திற்கு பிறகு நாட்டின் பொருளாதாரம் நிலை சீரடைந்து வருகிறது என்பதை அவர் நினைவுப் படுத்தினா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here