தொற்று பரவாமல் இருக்க எச்சரிக்கை

பொதுமக்கள் புதிய எச் ஓ பி யைக் கடைப்பிடிப்பதன் வழி  கோவிட் -19 பரவுவதைத் தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்த எச்சரிக்கையைப் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுளது.

உள்ளூர் நோய்த்தொற்றுக்கான வழக்குகளில் மூன்று மட்டுமே பதிவாகியிருந்தாலும்  சமூகத்தில் வைரஸ் தொற்று தொடர்பைக் கட்டுப்படுத்த சுய கட்டுப்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது.

தொற்றுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் புதிய இயல்பினை ஏற்றுக்கொண்டவர்களாக மாற வேண்டும்.

சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா அறிவித்த 10 நேர்மறையான வழக்குகளில்  ஏழு உள்ளூர்  வழக்குகள். அதனால் முதன் மை அக்கறையோடி விதிகளைபின்பற்ற வேண்டும்.

எனவே, வீட்டிலேயே கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய மலேசியர்கள், நிர்ணயிக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) கடைப்பிடிப்பதன் மூலம் அரசாங்கத்தின் உத்தரவை முனைப்போடு ஏற்றுக்கொண்டவர்களாக மதிக்கப்படுவர். குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட 13 ஆவது நாளில் இரண்டாவது கோவிட் -19  சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று டத்தோ டாக்டர் நோர் இஷாம். கேட்டுக்கொண்டார்.

பலர் இன்னும் இரண்டாம் கட்ட சோதனைக்கு இணங்காமல் இருக்கின்றனர். ஆனாலும் அவர்களிடமிருந்து தொற்று பரவும் அபாயம் உணரப்படவில்லை. ஆனாலும், அதை உறுதிப்படுத்திக்கொள்ள தனிமைப்படுத்தலுக்குப்பின் இரண்டாம் கட்ட சோதனை மிக அவசியம்.

மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளிக்கும் புதிய எஸ் ஓ பி நடைமுறைக்கும் இரண்டாம் கட்ட சோதனை முக்கியமானதாக கருத்தப்படுகிறது என்றும் டாக்டர் நோர் இஷாம் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here