இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 9 பேர் காயம்

கப்பாளா பத்தாஸ் : இங்குள்ள ஜாலான் பெர்மாத்தாங்  தீகாவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) இரவு ஒரு பல்நோக்கு வாகனம் பிக்கப் டிராக் ஆகிய இரு வாகனங்கள் நேருக்கு நேர்  மோதியதில் 9 பேர் காயமடைந்தனர்.

29 வயதான பாதிக்கப்பட்ட முஹம்மது பைஸ் ஹருன் ஓட்டி வந்த பிக்கப் டிராக் கப்பாளா பத்தாஸில் இருந்து  சுங்கை லோகன் வரை சென்றபோது சம்பவம் நிகழ்ந்ததாக செபராங் பிறை உத்தாரா ஓசிபிடி உதவி ஆணையர் முகமட் நூர் தெரிவித்தார். எம்.பி.வி.யின் டிரைவர் அஹ்மத் சுக்ரி இஷாக் (வயது 40), காருக்குள் மாட்டிக் கொண்டு அவரின் கால் முறிந்துள்ளது  என்று அவர் திங்களன்று (ஜூலை 6) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரை மீட்பதற்காக பட்டர்வொர்த் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 43 (1) (ஏ) இன் கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here