கடலுக்கு அடியில் கம்பித்தொடர்பு

எட்டு தீவுகள் உடன் சென்னையை இணைக்கும் அசர வைக்கும் திட்டத்தில் கடலுக்கு அடியில் 8 தீவுகள் உடன் இணைப்பு ஒன்றுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த திட்டம் பல்வேறு எதிர்கால நோக்கங்களைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலில் கடலுக்கு அடியே பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க இந்தியா பல நாட்களாக திட்டமிட்டு வருகிறது.

இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவுகள், கடலோர மாவட்டங்களில் கடல் வழியாக இணையத்தை வழங்க இந்த திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இப்படி அமைய உள்ள பைபர் ஆப்டிக் கேபிள் திட்டத்திற்கு தேசிய வனவிலங்கு மையம் அனுமதி அளித்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட இந்திய கடல் பகுதியில் இந்த கேபிள் செல்ல இருப்பதால், தேசிய வனவிலங்கு மையத்தின் அனுமதி இதற்கு அவசியம் ஆகும்.

இந்த பைபர் ஆப்டிக் கேபிள் திட்டடத்திற்கு கேணி (CANI) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். சென்னை – அந்தமான் நிக்கோபார் தீவுகளை (Chennai-Andaman & Nicobar Islands) சுருக்கி இந்த பெயர் வைக்கப்பட்டு உள்ளது. அந்தமானில் உள்ள 8 தீவுகளுக்கு சென்னையில் இருந்து பைபர் ஆப்டிக் கேபிள் கடலுக்கு கீழே கொண்டு செல்வதுதான் இந்த திட்டம் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here