கோவிட்-19 பாதிப்பு காலத்தில் ஆலயங்கள் செய்த சமூகச் சேவைகள் அளப்பரியது

கிள்ளான்,

நாட்டில் கோவிட்-19 பாதிப்பு உச்சக்கட்டத்தில் இருந்த வேளையில் இந்து ஆலயங்கள் மேற்கொண்ட சமூகச் சேவைகள் பாராட்டுக்குரியவை என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கருத்துரைத்தார்.

கிள்ளான் தாமான் செந்தோசா ஸ்ரீ காளிகாம்பாள் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், இந்த ஆலயத்திற்கு மாநில அரசாங்கம் எந்தவொரு மானியமும் வழங்காத நிலையில் அவர்களாகவே முன்வந்து சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 150குடும்பங்களுக்கு பொருளுதவியை வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது எனக் குறிப்பிட்டார்.

பி.ஆர்.ஜெயசீலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here