டி.பி.கே.எல் அதிகாரியை மிரட்டிய நபர் கைது

கோலாலம்பூர்: டி.பி.கே.எல் பணியாளரை மிரட்டிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சனிக்கிழமை (ஜூலை 4) மாலை 5 மணியளவில் ஜாலான் ராக்யாட்டில் போக்குவரத்து ஓட்டத்தை நிர்வகித்து வந்த டி.பி.கே.எல்.எல் அமலாக்க அதிகாரியை அந்த நபர் கோபமாக அணுகியதாகவும், அவர் மீது ஒரு கண்ணாடியை வீசியதாகவும் பிரிக்ஃபீல்ட்ஸ் ஓ.சி.பி.டி உதவி  ஆணையர் ஜைருல்னிசம் முகமட் ஜைனுதீன் ஹில்மி தெரிவித்தார்.

அதிகாரியிடம்  கூச்சலிட்டதாகவும்  பின்னர் ஒரு வெற்று கண்ணாடி அவரை நோக்கி வீசியதாகவும் ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரி அக்கண்ணாடி வீச்சில் இருந்து தன்னை தற்காத்து கொண்டதாகவும் அவர் கூறினார். அவரது காரை சாலையோரத்தில் நிறுத்தி இருந்ததற்கு  அமலாக்கர்கள் அவருக்கு சம்மன் வழங்கியதால்  அந்த நபர் கோபமடைந்தார் என்று அறியப்பட்டது.

37 வயதான அவர் அமலாக்க அதிகாரியை அணுகி, தனது காரை அகற்றுவதற்கு முன்பு “ஜாகா-ஜாகா” (கவனமாக இருங்கள்) என்று கூறி அதிகாரியை அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. அதிகாரியின் சக ஊழியர் போலீஸை அழைத்து அந்த நபர் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மனநல  பாதிப்பு இருப்பதாக நாங்கள் பின்னர் அறிந்தோம். கோலாலம்பூரில் மருத்துவமனை உள்ள மனநல பிரிவில் அவரைப் பற்றிய பதிவுகள் உள்ளன என்று ஏசிபி ஜைருல்னிசாம் கூறினார். இந்த வழக்கை விசாரித்த  போலீசார் பின்னர் அவரது குடும்பத்தினருடன் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here