துப்புரவு செய்து பாதுகாக்க முன் வந்த தன்னார்வலர்கள்

தம்பூன்,

தம்பூன் , தாமான் மேவா வீடமைப்புத் திட்டம் எதிரே இருக்கும் இந்து மயானம் புதர்கள் மண்டியிருக்க பலரின் கவனத்தை ஈர்க்க துப்புரவு செய்ய தன்னார்வலர்கள் முன் வந்துள்ளனர்.

தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில மந்திரி பெசாருமான டத்தோஸ்ரீ அமாட் ஃபைசால் அஸுமு பார்வைக்கு கொண்டு செல்ல முறையே மானிய விண்ணப்பம் செய்யப்படும் என கிந்தா மாவட்ட இயற்கை அழகு இயக்கத் தலைவர் முனீஸ்வரன் மாயாண்டி தெரிவித்தார்.

ஈப்போ மாநகர் மன்ற உறுப்பினர் யுகேன் மகாலிங்கம் நேற்று சனிக்கிழமை காலையில் மயானம் சென்று பார்வையிட்டார்.

ஈப்போ மாநகர் மன்ற முஸ்லிம் அல்லாத துணைக் குழுத் தலைவர் பொறுப்பு வகிக்கும் அவர், ஈப்போ மாநகர் மன்ற உதவியுடன் இந்த மயானத்தை பராமரிக்கும் ஆலய நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்படும் என்றார்.

பொது சேவகர் செல்வராஜு மீனாட்சி சுந்தரம் அவர்தம் தொண்டூழிய நண்பர்களுடன் இப்பணியில் ஈடுபடுவார் என வாக்குறுதி கொடுத்தார்.

சாந்தி ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here